Print this page

சி.டி. நாயகம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.10.1933 

Rate this item
(0 votes)

தோழர் சி.டிநாயகம் அவர்கள் கூட்டுறவு (கோவாப்பரேட்டிவ்) உதவி ரிஜிஸ்ட்ராராக இருந்து அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை யும் ஆக்ஷிகளையும் அறிந்து ஓரளவுக்காவது அவைகளை அகற்ற எவ்வளவோ அவர் முயற்சித்து வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதன் பயனாய் பார்ப்பனர்களாலும் பார்ப்பனக் கூலிகளாலும் அவர் எவ்வளவோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். 

அப்படிப்பட்ட வீரமும், தீரருமான நாயகம் இப்போது தனது 55 வது வயதில் உத்தியோகத்தைவிட்டு நீங்கி பென்ஷன்பெற்று வாழ்ந்துவருகிறார். இனி இவரது வாழ்நாள் பெரும்பாலும் பொதுஜன வாழ்விலேயே கழிக்கப் படும் என்பதில் யாருக்கும் ஆக்ஷேபனையிராது. 

தோழர் நாயகம் அவர்களும் அவரது வாழ்க்கைத் துணையாரும் மக்களும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் மனப்பூர்வமாய் ஈடுபட்டு உழைத்து வந்ததும் யாவரும் அறிவர். 

ஆதலால் தோழர் நாயகம் அவர்கள் உத்தியோகத்திலிருந்து விலகியது சுயமரியாதை இயக்கத்துக்கு ஒரு பெரும் ஆதரவு என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.10.1933

Read 118 times